Thursday, 31 March 2016

BCP என்னும் கண்துடைப்பு !

          இனிய தோழர்களே ! நமது நிர்வாகம் கணினிமயமாதல் மற்றும் CBS தொழில்நுட்பம் ஆகியவற்றில் காட்டிய ஆர்வம் அதன் தரத்தில் காட்டவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகின்றது. Finacle, Mccamish போன்ற மென்பொருட்களை பயன்படுத்த துவங்கியதில் இருந்தே தடுமாற்றமான சூழல் நிலவுகின்றது. எத்தனை அலுவலகங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன, எத்துனை BANDWIDTH மென்பொருள் எடுத்துக்கொண்டு , திறம்பட செயல்பட முடியும் என்ற Field Work சரியாக செய்யவில்லை என்பது மிகவும் வெளிபடையாக தெரிகின்றது. 




        50 மற்றும் அதற்கு மேல் புழக்கத்தில் இருக்கும் கணினிகள் இடம் பெற்ற தலைமை தபால் நிலையங்களுக்கு ஒரு முறை , மற்ற கணினிகள் குறைவாக செயல்படும் அலுவலகங்களுக்கு இன்னொரு முறை என்று வகுத்ததில் தவறில்லை. ஆனால் சரியான குதிரை திறன் இருந்தால் மட்டுமே வேலை செய்யகூடிய மென்பொருட்களை Infosys நிறுவனத்திடம் பெற்றது பின்னடைவாக அமைந்துவிட்டது. அதற்கு ஏற்றார் போல  Sify நிறுவனத்தின் பங்களிப்பை சொல்ல வேண்டும் ஏன்னென்றால்  Signal இல்லாத இடங்களில் எல்லாம் AIRTEL Data Card கொடுத்தது பெரும் அபத்தம்.

               BCP என்ற மாற்று முறை உண்மையில் கண்துடைப்பு என்றுசொன்னால் அது மிகையாகது. Finacle மென்பொருளில் One-to-One Transaction ID உருவாகும் முறை மிகவும் பாதுகாப்பனது.ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ஒரு Transaction ID என்ற நிலை மாறி மொத்தமாக (ஒரு Set க்கு  ஒரு Transaction ID) என்ற முறையை பின்பற்ற சொல்கிறார்கள். இந்த முறைக்கான பயிற்சியோ விழிப்புணர்வோ எந்த ஒரு பயிற்சி வகுப்புகளிலும் தருவது கிடையாது. மென்பொருள் வேலை செய்யவில்லை என்ற கடுமையான சூழ்நிலையில் , வாடிக்கையாளர்கள் கேட்கும் சகல விதமான கேள்விகளுக்கும் முகம்  சுளிக்காமல் பதில் சொல்லி சமாளித்து விட்டு , CPC மற்றும் SPOC உடனுக்குடன்  சொல்லும் தகவல்களை ஏற்று குடும்ப சுமைகளை சரி வர கவனிக்க இயலாமல் இரவு நீண்ட நேரம் பணி செய்து அவப்பெயர் வாங்கும் ஊழியர்களின் நிலை நெருப்பின் மேல் நடக்கும் கடினமான சூழ்நிலை விரைவில் மாறும் என்று நம்புவோமாக !



            இந்திய பிரதமர் DIGITAL INDIA Campaign  நடத்திகொண்டிருக்கும் வேளையில் தள்ளாடி கொண்டிருக்கும் தபால் துறையை மீட்டு எடுக்கும் பெரும் பொறுப்பு நிர்வாகத்திடமும் Infosys நிறுவனத்திடமும் மட்டுமே உள்ளது. இத்தனை சிரமங்களுக்கு இடையே  தன் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் அஞ்சல் துறை ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை இங்ஙனம் தெரிவித்துக்கொள்கிறோம்.    

No comments:

Post a Comment