Saturday, 27 July 2013

மேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மேலாண்மை கல்வி  நிறுவனங்களில் எம்.பி.ஏ உள்ளிட்ட மேலாண்மை படிப்புகளில் சேர மேட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உலக அளவில் உள்ள மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர மேட் திறனறியும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஐஐஎம் உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு மேட் நுழைவுத்தேர்வின் மதிப்பெண் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.



இப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஏதாவதொரு இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வெழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.1200ஐ பரோடா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகிய கிளைகளிலும் AIMA மற்றும் AIMA புது தில்லி ஆகிய கல்வி மையங்களிலும் விண்ணப்பங்களை பெறலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க www.aima.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தியும் விண்ணப்பிக்கலாம்.
எழுத்து வடிவிலான தேர்வு செப்டம்பர் 1ம் தேதியும், கணினி முறையில் செப்டம்பர் 7ம் தேதியும் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

ஆகஸ்ட் 17ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட்17ம் கடைசி நாளும் தபால் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 19 கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.aima.in/testing-services/mat/mat.html என்ற இணையதளத்தை பார்க்கலாம். 

(Source:dinamani.com)

No comments:

Post a Comment