Tuesday, 16 July 2013

குரூப் 4 தேர்வு: 15 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்


குரூப் 4 தேர்வுக்கு 15 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 663 பணியிடங்களுக்கான அறிவிக்கை கடந்த மாதம் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூலை 15) கடைசி நாளாகும். ஆகஸ்ட் 25- ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 244 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இது குறித்து தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், ""தேர்வு நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும். எனவே, தேர்வில் வெற்றி பெறுவோருக்கு மட்டுமே பணியிடங்கள் ஒதுக்கப்படும். இடைத்தரகர்களை யாரும் நம்ப வேண்டாம்'' என்றார்.
இதுவரை 15 லட்சம்: குரூப் 4 தேர்வு எழுத 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். இதனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்து 663 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பம் செய்துள்ளனர். கடைசி நாளான திங்கள்கிழமை மாலை வரை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருப்பதாக அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவும், அதன் வழியாகவே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் முதல் வாரத்துக்குப் பிறகு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Source: dinamani)

No comments:

Post a Comment